கவிதைமணி

கைகோர்ப்போம்:- சீர்காழி .ஆர் .சீதாராமன் .

கவிதைமணி

" கலாச்சாரமும்   பண்பாடும்
  கால மாற்றாத்தால் நாகரீக
   வளர்ச்சியால் சிதைந்து
  விடாமல் காக்க வழிகாட்ட
   பலமாக  கைகோர்ப்போம் "

" மாற்றுத்திறனாளிகளை
   திருநங்கைகளை ஆட்டிசம்
   குழந்தை முதியோர்களை
   விழி மேல் வழி வைத்து
   போற்றிட கைகோர்ப்போம் "

" காடுகளை  பறவைகளை
 மரங்களை  வீட்டு  விலங்குகளை  
சின்ன சின்ன மண் புழுக்களை அழிய   
விடாமல் தடுக்க இணைந்து
  கைகோர்ப்போம் "

" நதிகளை      இணைக்க 
சமத்துவம்  மலர உண்மையும்
நேர்மையும்   காண உழைப்பை மதிக்க
இயற்கையை துதிக்க, 
விடாமல்   கைகோர்ப்போம் "

"மண்வளம்  கூட    பசுமை  செழிக்க 
அறுவடை கொழிக்க மனித   உள்ளம்  
மணக்க     மண்வாசனை பரவ என்றும்
கைகோர்ப்போம்    தோள் கொடுப்போம் "

" கொடுமையை  உயர்   மன  அழுத்தங்களை   
கடும் துயரங்களை  தோல்விகளை
வேரறுத்து முட்டி முளைக்கும்
விதை போல் விடியலை தேட
கைகோர்ப்போம்   என்றும் "

" நாளைய தலைமுறை செழிக்க
விஞ்ஞான   வளர்ச்சி   சிகரம்  
தொட பசுமை எங்கும்  நிறைய
சோதனைகளை சாதனைகளாக்க
தூயமனதோடு நம்பிக்கையோடு
கைகோர்ப்போம் " 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT