கவிதைமணி

கைகோர்ப்போம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

கவிதைமணி
வீட்டிற்கு   விளக்கேற்றும்   தெய்வ  மென்று            வியந்தபெண்ணைப்   பாலியிலின்   கொடுமை   செய்துஏட்டினிலே  எழுதவொண்ணா   அலங்கோ   லத்தில்            எடுத்துவந்து   சாலையோரம்   எறிந்து  சென்றார் !பூட்டனையும்   பாட்டனையும்   சாதி   சொல்லிப்            புதைத்திட்ட   தாழ்ந்தகுல   வீட்டி   ருந்துபோட்டியிலே   வென்றுகல்வி   கற்க   வந்தால்            பொழுதலரும்  முன்னவரைக்   கொன்று   போட்டார் !இருமனங்கள்   கலந்ததாலே   திரும  ணந்தான்            இனிமையாக   செய்துகொண்ட   இளமை   யோரைக்கருமனத்துள்   உயர்சாதி   ஆண   வத்தால்            கழுத்தறுத்துப்   பிணமாக்கி   வாழ்வ   ழித்தார் !அருமையாக   வளர்த்தபெண்ணை   மணமு   டித்தே            அகம்குளிர   வாழ்வாளென்   றனுப்பி   வைக்கதிருவின்னும்   வேண்டுமென்று    கொடுமை   செய்து            திரிதன்னை    அடுப்பினிலே   போட்டெ   ரித்தார் !பெண்குழந்தை   என்றவுடன்   கள்ளிப்   பாலால்            பெருமூச்சை   நிற்கவைத்துக்  குழியுள்   போட்டார்கண்முன்னே   நம்பணத்தை   ஆட்சி  யாளர்            களவாடக்   கேட்டோரின்   உயிர்ப   றித்தார் !மண்மீது   நடக்குமிந்த   கொடுமைதன்னை            மனம்கொண்டு  பார்ப்பதுவோ ;  கைகள்  கோர்ப்போம்புண்செய்யும்   கயவர்தம்   தோலு  ரித்தே            புதுக்குமுகம்  நாம்படைப்போம்  எழுந்து  வாரீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT