கவிதைமணி

கைகோர்ப்போம்:  பொன்.இராம்

கவிதைமணி

நதிகள் ஏரிகள் இணைத்திட
இந்திய மக்கள்
கைகோர்ப்போம்!

பசுமை பாரதம்
கண்டிடவே
வித்துகள் அனைத்தையும்
சேமிப்போம்!

சேர்த்து வைத்த
வித்துகளை பாங்காய்
மக்கள் நிலத்தில்
விதைத்து வளர்த்திடவே
கைகோர்ப்போம்!

வீட்டிற்குத் தேவையான
தானியம்,காய் பயிரிடவே
கட்டாயச் சட்டம்
இயற்ற கைகோர்ப்போம்!

விவசாயிகள் முன்னேற்றங் காண
கைகோர்ப்போம்!
நீர் வளம் காத்திடவே
மழைநீ்ர் சேமிப்பை
பின்பற்றுவோம்!

தீவிரவாத வேரறுக்க
சாதி மதங்களில்லா
சமதர்ம சமுதாயம்
படைத்திடவே
கைகோர்ப்போம்!

பெண்ணினத்தின் வளர்ச்சி
காணவே கைகோர்ப்போம்!
சட்டங்கள் பெண்ணுக்காக
புத்தாக்கம் செய்திடவே
கைகோர்ப்போம்!

இலஞ்சம் இல்லா
இந்திய நாடு காண
கைகோர்ப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT