கவிதைமணி

சூரிய தாகம்: லூர்து எஸ் ராஜ்

கவிதைமணி

சூரியனின் தாகம் இப்போத திகமானது ; அதன்
சுட்டெரிக்கும் வெயிலலையோ சுழன்று வீசுது.
மேனியிலே வியர்வை ஊற்று பெருக்கெடுக்குது
மீண்டும் மீண்டும் நீரைநம் நாவு தேடுது.

பூமிப் பந்தை எரிப்பது போல் அனலும் வீசுது;
பொதிந்துள்ள கடல் நீரும் கொதித்துக் குதிக்குது.
எல் நினோ விளைவு என்றேல்லாரும் சொல்கின்றார்;
எப்படித்தான் இவ்வெப்பத்தை தாங்கிடுவோமோ?

புவிமுழுதும்  காத்திடுமோர்  குடையைச் செய்வோமா ?
அவியாமல் உலகங் காக்கும்  மூடி செய்வோமா?
இனியும் நாம் தாமதித்துக் கொள்ளளலா குமோ?
மனிதன் நினைத்தால் மண்ணிலே ஆகாததுண்டோ ?

பச்சைப் பட்டுடுத்தி வைத்தால் பாதுகாப்பாம் ; பூமியின்
பறந்து விரியும்  வனக்குடையால் வெப்பம் தீருமாம்; நாமும்
மரங்கள் நட்டு மாநிலத்தைக் காத்திடுவோமா? இந்த
மார்க்கமிதை  மறவாமல் இன்றே செய்வோமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT