கவிதைமணி

சூரியதாகம்: அ.வேளாங்கண்ணி

கவிதைமணி
பெருந்தாகத்துடன் தினமும்விழித்து எழுகிறதெங்கள் சூரியன்..மரங்கள் இருந்தால் சிறிது ஆசுவாசப்படலாம்என எண்ணித்தான் வந்தது..நதிநீர் கண்டு சிறிது தாகம் தீர்க்கலாம்என எண்ணித்தான் வந்தது..குளம் குட்டை கரைகளில் சிறிது கால் நனைக்கலாம்என எண்ணித்தான் வந்தது..கானகங்களிலும், தோட்டங்களிலும் ஓடி விளையாடலாம்என எண்ணித்தான் வந்தது..ஆனால் கிடைத்ததோ..வறண்ட நதி, வற்றிய குளம், சுரண்டப்பட்ட மணல்வெட்டப்பட்ட மரம், அழிக்கப்பட்ட காடு..இத்தனையும் கண்டு அதற்கு வந்தது பெருங்கோபம்..தினம் தினம் தனது கோபத்தின் அனலைஅதிகமாக்கிக் கொண்டே போகிறது..அதன் உக்கிரம் தாங்காமல்ஒரு நாள் பொசுங்கிவிடப்போகிறது இந்த உலகம்..அதற்கு முன் அதற்கான தாகம் போக்கும்சிறு சிறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலொளிய‌விமோச்சனம் இல்லை..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT