கவிதைமணி

சூரியதாகம்: மணி.கணேசன்

கவிதைமணி

வெளியில் தலைக்காட்ட முடியாத வேதனை
புழுக்கத்தில் கொதித்துக் கொதித்து
அடங்குகிறது வேகும் உடல்
வியர்வைக் குளியலில்
ஊளை நாற்றமடிக்கும் மனித அழுக்குகள்

தப்பிப் பிழைத்து வாழும் 
தேன்சிட்டொன்று தேங்கிய கழிவுநீரில்
முக்கியெடுக்கும் சிறகுகளை.
தண்ணீரின்றித் தவிக்கும் கால்நடைகள்
நதிமேகம் பொழிய வழியின்றி 
நீர் கெட்டிப்பட்டு அலைய...
வெட்டி வீழ்த்தப்பட்ட பெருங்காட்டின்
நடுவே அத்தனைக்கும்
ஆசைப்படும் ஆதியோகிக்குப் 
பெருமழை வேண்டா 
பேராசைக் குணம்!

சுட்டெரிக்கும் சூரிய தாகத்தைத் தணிக்க-
பேருக்கென மரம் வைக்காது
ஆளுக்கொரு செடி வைப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT