கவிதைமணி

சூரியத்தாகம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

கவிதைமணி

மரங்கள் இல்லா சாலைகள்
மழையே பொழியா வானிலை
ஊர்கள் எல்லாம் ஆலைகள்
நகர்களில் குவியும் மக்கள்
ஏரிகள் தோறும் குடியிருப்புக்கள்
ஏக்கர் கணக்கில் வீட்டுமனைகள்

தங்க நாற்கரச் சாலைகள்
தடையே இல்லா போக்குவரத்திற்கு
உயர உயர மேம்பாலங்கள்
நீரே காணாத ஆறுகள்
உடைந்து போன குன்றுகள்
உயிரை உறிஞ்சும் ஆழ்துளை கிணறுகள்.

குளங்கள் எல்லாம் தூர்த்தாச்சு
வளங்கள் எல்லாம் சிதைஞ்சாச்சு
கடலும் கூட பகையாச்சு
இயற்கை எல்லாம் செயற்கையாச்சு
ஓசோன் படலம் சுருங்கிட
வீசும் சூரியக் கதிர்களில்
வெப்பம் வேகமாய் வீசிட
பசுமைத்தாகம் குறைந்திட
பற்றிய சூரியத்தாகம் எரிந்திட
பசுமை பூமியும் பாலையாச்சு

வீடுகள் தோறும் மரம் வளர
நாடுகள் எல்லாம் சோலைகளானால்
கேடுகள் பூமியை விட்டகலும்
குறைந்திடும் குளிர்ந்திடும் சூரியத்தாகமுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT