கவிதைமணி

கோடை மழை:  கவிஞர் இரா .இரவி !

கவிதைமணி

கோடை மழை கொண்டாட்டம் தரும் 
கொடிய வெப்பம் குறைத்து இதம் தரும் !

குளம் கண்மாய் ஏரி ஆறுகள் நிரம்பிடும் 
குதூகலமாகக் குழந்தைகள் விளையாடிடும் !

வராது வந்த மாமழை எனப் போற்றிடுவோம் 
வளம் பெருக்க வந்த மழை  எனப்  பாராட்டுவோம்  !

வாடி நிற்கும் பயிர்கள் துளிர்த்து வளர்ந்திடும் 
வேதனையில் உள்ள விவசாயிகள் மகிழ்வார்கள் !

காதலியைக் கண்ட காதலன் போல 
கழனியில் உள்ள உழவர்கள்  மகிழ்வார்கள் !

நிலத்தடி நீரின் உயரம் உடன் உயர்ந்திடும் 
நிலம் செழிக்கும் வளம் கொழிக்கும் !

அனல் காற்று குளிர் காற்றாக மாறிடும் 
அனைவருக்கும் மகிழ்ச்சி மனதில் பொங்கும் !

அண்டை  மாநிலங்களிடம் கெஞ்ச வேண்டிய 
அவசியம் இல்லாது ஒழிந்து போகும் !

இடியுடன் கூடிய கனமழை பொழிந்தால்
இன்னல்கள் தீரும் இன்பம் பெருகும் ! 

குடி தண்ணீர் பஞ்சம் இல்லாது போகும் 
குடித்திடத் தண்ணீர் எல்லோருக்கும் கிட்டும் !

வெப்பமயமாதல் இல்லாது போகும் 
வசந்தம் வரும் வாசமலர் மலரும் !

பட்ட மரங்களில் இலைகள் வளரும் 
பட்ட துன்பங்கள் காணாமல் போகும் !

இயற்கை  நம்மை கைவிடாது காக்கும் 
இயற்கையை மதித்தால் நன்மை தரும் !

கோடை மழையை  வாருங்கள் வரவேற்போம் 
குடை பிடிக்காது  நனைந்து மகிழ்ந்திடுவோம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவு நேர தூய்மைப் பணி! அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

தேர்தல் வேட்பாளர் நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு முன்னேறிய மிட்செல் ஸ்டார்க்!

கேரள உள்ளாட்சித் தேர்தல்: பினராயி விஜயன் வாக்களித்தார்!

அமித் ஷா கைகள் நடுங்கின; என் சவாலை அவர் ஏற்கவில்லை! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT