கவிதைமணி

கோடை மழை: கோவிந்தராஜன்  பாலு

கவிதைமணி

கொட்டிடும் முழக்கிடும் கோடையில் இடியுமே
கொட்டுமே வானமே கொட்டிட இன்பமே.
கட்டிய காளைகள் கட்டவிழ்த் தோடுது.
கட்டிளம் காளையும் கட்டிடத் தாவுது.

பட்டம ரங்களில் பட்டதே மழைத்துளி
பட்டவைத் துளிர்த்திடும் பாவையின் முகமென.
தொட்டிடத் துடிக்குது துணையைத் தேடுது.
தோகையை விரித்திட தோன்றும ழகினிலே.

கத்துது தவளையும் கரையுது எலிவலை
கண்டதும் பிடித்திட கவனமாய்ப் பாம்புமே.
சத்தமும் காதிலே சடசட யென்றிட
சங்கீதம் பாடுமே சன்னலும் காற்றிலே.

நித்தமும் வாழ்க்கையும் நிறைந்திட வாழ்வினில்
நேசமாய் மரங்களை நிறைவுற நட்டிட
சத்திய வேதமென சகலரும் கொண்டிட
சர்க்கரை ஆறுமே சாலையினி லோடுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT