கவிதைமணி

கோடை மழை: லூர்து எஸ் ராஜ்

கவிதைமணி
கோடைமழை ஆங்காங்கே குறு மழையாய் பெய்தாலும்
கோடை இடி மின்னலுடன்   கொட்டித் தீர்த்தாலும்
கூடுதல் மகிழ்ச்சிக்கு குறைவில்லை; துன்பமில்லை;
கேடுதரும் வெப்பத்தை சிறிதாய்த் தணித்து வைப்பதால்.
வெப்ப நோய்கள் விலகிடும்; வீரிய பிணிகள் குறைந்திடும்;
கப்பிய தாகம் தீர்த்திடும்; கால் நடைகளும் பிழைத்திடும்;
வெடிப்புகள் நீங்கிடும் நிலத்தில் ; உழவர் கலப்பையை
துடிப்புடன் ஒட்டி மென்மையாக்கி மேலும் மகிழ்ந்திடுவார்.
மழைத்துளி மண்ணில் வீழ்ந்ததும் மண்மணம் வீசிடும்;
மறைந்து வாழும் பூச்சிகளாம் உழவரின்  நண்பர்கள்
வேதியல் மாற்றம் செய்ய வெளியே விரைந்திடுவர்;
விளைந்திடும் கோடைப்பயிர் ; விவசாயி மகிழ்ந்திடுவார்.
கோடைத் தூறலை வரவேற்போம் ; குடைகளை சுருக்குவோம்;
குளிர் தென்றலென எண்ணி மகிழ்வோம்; சிறிதாறுதல் பெறுவோம் ;
கூப்பிய கைகளுடன் இயற்கையை வணங்குவோம் ; வாழ்த்துவோம்;
கொண்டாடுவோம் இந்தத் தென்மேற்கு  மழைத்தாயின் சிறுமகளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT