கவிதைமணி

கோடைமழை: பாவலர் கருமலைத்தமிழாழன்

கவிதைமணி
மழலையின்வாய்   இசைத்தமிழைக்  கேட்டல்  போன்றும்    மரத்தினிலே   பழுத்தபழம்   சுவைத்தல்   போன்றும்அழகான   சிற்பத்தைக்   காணல்  போன்றும்    அனலிடையே   தென்றலது   தழுவல்   போன்றும்உழவுசெய்த   நிலப்பயிரின்   பசுமை  போன்றும்    உச்சிவெயில்   தனில்நிழலில்  அமர்தல்  போன்றும்முழங்குயிடி   ஒலியோடு   கோடை   தன்னில்    முகம்குளிரப்   பெய்மழையோ   இன்பம்  நல்கும் !வலைக்குள்ளே   சிக்கியமீன்   துடித்தல்   போன்று    வறட்சியிலே   துடித்திட்ட   விலங்கும்   புள்ளும்கலைநயத்தில்   மிளிர்கின்ற    ஓவி  யம்போல்    கண்ணொளிரும்   தாகந்தான்  தீரு  மென்றுஇலையுதிர்ந்த   மரங்களெல்லாம்   துளிர்த்தல்   போன்றே    இல்லாமல்   இருந்தபுல்லும்   தலையைக்   காட்டும்குலைதொங்கும்   வாழைமர   எழிலைப்  போன்று    குதூகலம்தாம்  கோடைமழை  பெய்யும்   போதே !வியர்வைதுளி   எரிச்சலினை   இதமாய்   மாற்றி    வீசும்தீக்   காற்றுதனைப்   பதமாய்   மாற்றிஅயற்சிமன   அழுத்தத்தை   மகிழ்வாய்   மாற்றி    அலையெழுப்ப   ஏரிகளை  நீராய்  மாற்றிசெயலற்ற   இயக்கத்தைச்    செயலாய்  மாற்றிச்    செழிப்பிழந்த   நிலந்தன்னைச்   செழிப்பாய்   மாற்றிஇயற்றமிழ்தான்   அளிக்கின்ற   இன்பம்   போல    இனிமையினை  அளிக்கும்நல்   கோடை   மழையே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT