கவிதைமணி

எனை நனைத்த மழை :- ஆ.மகராஜன்

கவிதைமணி

காய்ந்து வெடித்த
நிலத்தில் நின்றவனை 
வானிலிருந்து கடவுளின் 
விரல்களாய்
நீண்டு தீண்டின தூறல்கள்.

கண்களில் துளிர்த்த 
கண்ணீரோடு கலந்து
உடலின் வழி ஊர்ந்து
உப்பு சுவைக் கூட்டி
வழிந்த நீர் 
காய்ந்த வெடிப்புக்
கீறல்களுள் புகுந்து 
காணாமல்  போனது..

தூறல் நின்று போனதால்,
வானம் பார்த்து நின்றவனின்
கண்களில் வழிந்த 
கண்ணீர் நிற்கவேயில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT