அலங்கா நல்லூர் பாலமேடு
அவனியா புரமென்று
எல்லா ஊர்களிலுமே
எழிலான ஜல்லிக்கட்டு
இனிதாக நடந்திடவே
ஏழு நாட்கள் போராடிய
இளைஞர்கள் வாழ்கவென்றே
எழுப்பு ஓசை வெற்றிமுரசே!
நல்லவர்கள் நாட்டையாள
நயவஞ்சகர்கள் வீழ்ந்து போக
ஏழை எளியவர்கள்
இன்பமாய் மகிழ்ந்து வாழ
என்றைக்கும் நேர்மையொன்றே
இருந்து நல் ஆட்சி செய்ய
வேகமாய்க் கொட்டிடு வெற்றிமுரசே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.