கவிதைமணி

வெற்றி முரசு " ரீகன். ஜெயக்குமார்

கவிதைமணி

வையகத்தில்
தெளிந்தோடும் நீரோடையிலும் 
கலங்குதல் நடக்கலாம்..

நம்மை சுற்றியுள்ளோர்களின் நடத்தைகளும் 
கலங்குதலைச் செய்யலாம்

கலங்கியபின் தெளிவதும் 
நடந்திடும் காரியமே....

தெளிவான மனங்கள் கூட 
தாக்குதலாலும் , சாடுதலாலும் 
கலங்கிடும் நிலை காணலாம்...

பொறாமை உள்ளங்கள் 
அர்த்தமற்ற வார்த்தைகள் வீசி

அமைதியாம் மனதிலே 
கவலையெனும் கலங்குதலை 
வேண்டுமென்றே உருவாக்கலாம் ..

தைரியமற்ற நிலைதானும் 
மனங்களில் இருந்தால் 
கலங்குதலும் வேகமாகலாம் ..

தெளிவதும் மெதுவாகலாம்...

சமூகமொன்றின் கட்டமைப்பை 
கலைத்திட நினைப்போர் 
திட்டமிட்டே செயலொன்றை 
வன்செயலால் தொடங்கலாம்...

கலங்கி நின்றால் வென்றிடுவார்..
துணிந்து நின்றால் தயங்கிடுவார்..

வீறுநடை போட்டு 
வீரமதை தனதாக்கி 
வெற்றி பல கண்டிட்ட 
பண்பாட்டிலுயர்ந்த தமிழினமே ...

மனம் கலங்காமலே வாழ்ந்திடு ..
உன் பலத்தை எதிரிக்கும் காட்டிடு ....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT