உலக அரங்கில் தமிழ் நாட்டின் மதிப்பு உருக்குலைந்து வருவது வேதனை ! அரியாசன ஆசையில் மனிதன் இங்கே ஐய்ந்தறிவு விலங்காகி வருகின்றான் ! அறம் மறந்து அறிவிலி ஆகின்றான் ஆசைப் பிடித்து நாளும் அலைகிறான்! மனிதன் என்பதை மறந்து துளியும் மனிதாபிமானமின்றி மரமாகிறான்! எப்படியும் அரியாசனம் அமர்வதே எனது குறிக்கோள் என்று திரிகிறான் ! அரியாசனத்தில் அமர்ந்து முன்பு ஆட்சி நடத்தியோர் நிலை அறியாமல் ! அளவிற்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சுதான் அளவின்றிய பதவி ஆசையும் நஞ்சுதான் .வாக்களித்த மக்களே வெறுக்கும்படி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் ! ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் அரியாசனம் துறந்த துறவி புத்தர் ! பேராசை பெரு நட்டம் என்று அன்றேபெரியோர்கள் சொல்லி வைத்தனர் !.தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.