அரியாசனம் யார் கையில் ? .அரியாசனமறியா மக்கள் இல்லை !.அறிவுடையோர் ஒதுங்கி நிற்க .மாறுவேடம் தரித்து மயக்கி .ஒட்டி உறவாடி வஞ்சனை செய்து .காத்திருந்து உயிரை குடித்து .கணநேரத்தில் ஒன்று கூடி .ஊரை நம்ப வைத்து நாடகமாடி .முரட்டுக்கூட்டம் நூதனமாய் .ஆட்டம் போட்டு அரியணையில் அமர ! .மக்கள் தான் தெருவில் நிற்கிறோம் !.இதுவா மக்கள் ஆட்சி இல்லவே இல்லை !.மக்கள் வறுமையே மூலதனமாய்.பணம் பெற்று ஓட்டு போட்டு .இலவசமழையில் நனைந்து .எதையும் கேட்கும் தகுதியில் இல்லையே !.பணம் உள்ளவர் கையில் அதிகாரம் .அதிகாரம் உள்ளோர் அரியணையில் !.இனியாவது சிந்திக்கலாமே !.தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.