கவிதைமணி

எதிர்காலம்: சு.ஜெயக்குமார்

கவிதைமணி

எனக்கும் உண்டோ எதிர்காலம்
என ஏங்கும் அன்பனே
இதோ உனக்கொரு சேதி
எதிர்காலம் இல்லையென்று
எவனொருவன் வெம்பினானோ
அவன் அன்றே மரித்தவனாகிறான்

எதிர்காலத்துக்கு ஏது இறந்தகாலம்
என்பதை மனதில் வை நீ எக்காலும்
எதிர்காலத்தின் எதிர்காலம் நம்பிக்கை
அந்த நம்பிக்கை இல்லையெனில்
இல்லை எவனுக்கும் வாழ்க்கை

கொள்ளையடிப்பவன் கோலோச்சுகிறான்
உழைப்பவன் வீழ்த்தப்படுகிறான்
கள்ளம் பேசுபவன் நல்லவனாகிறான்
உண்மை பேசுபவன் ஊர்ப்பழி ஏற்கிறான்

என உடைந்து போகும் உள்ளமே
ஒரு உண்மையை நீ அறிந்துகொள்
சாத்தானுக்கு இருக்கும் எதிர்காலம்
இறைவனுக்கு நிச்சயம் இருக்குமன்றோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT