கவிதைமணி

நீதியைத் தேடி:  -ரெத்தின.ஆத்மநாதன்,

கவிதைமணி
நீதியைத் தேடி நித்தம் நிம்மதி இழந்த மக்கள் பாதியில் உயிரை மாய்த்துப் பரலோகம் சேரும் அவலத்தைப் பாடுவதால் அவர்தம்ஆன்மாவேனும்பவளத்தைப் போல நின்று பயனினை அடைந்திடுமோ?அதீத ஆசைதானே அநீதியின் அடிவேராகும்பகீரத முயற்சியாலே பலரையும் பகைத்து ஏமாற்றி சேர்க்கின்ற சொத்து என்றும் நிம்மதி கெடுப்பதைப்பார்க்கின்ற பாவிகள் இன்னும் பகையினை விடாத தேனோ?நீதிக்குப்  புறம்பாய் பணம்,பொருள்,பதவி என்று ஏகமாய் அனைத்தையும் எனக்கு மட்டுமே என்று சொல்லிஉற்றார் உறவினரை அண்டவே விடாத ஆன்மாக்கள்இம்மையில் மட்டுமல்ல எழுமையிலும் தண்டனை பெறாதோ?நீதிதேவன் கண்களில் கருப்புத் துணி... கட்டாயம் அவனுந்தான்அனைவருக்கும் பொதுவென்று அவனிக்கு உணர்த்திடவே!ஆனாலும் திருடரெல்லாம் அவன் கவனிக்க மாட்டானென்று அநீதி இழைக்கின்றார் பெரும் அல்லலில் வீழ்ந்திடவே!நீதி  மட்டும்  சாவதில்லை  நிலைகள்  பலவற்றில்தீங்கிழைப்போர் தண்டனை பெறுவது நிஜமாய் மிகவுறுதி!பாங்குடனே வாழ்வோர்க்குப் பல சங்கடங்கள் வந்தாலும் நீதி தேவன் அவர்களை நிச்சயம் ரட்சிப்பான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT