கவிதைமணி

நீதியைத் தேடி : உத்ரன்

கவிதைமணி
தேடித்தான் நீதி கிடைக்குமென்றால்நிச்சயமாய் அந்நாடு நல் நாடில்லை!தேடியும் நல்நீதி கிடைக்காதென்றால்நிலவுலகில் அந்நாடு வீணேயாகும்!இந்திய இளைஞர்கள் இப்போது கேட்கும் நீதிமரபைக் காப்பாற்றுங்கள்!மாட்டைப் பிடிக்க விடுங்கள்!உச்சநீதி மன்றத்திற்கே உரிய நேரம் தெரியவில்லை!தாமதமாகும் நீதி அநீதிக்கு இணையேயன்றோ!ஆட்சியாளர்கள் கருத்தெல்லாம் பதவியிலும் பணத்திலும்...அப்பட்டமாய் இதனை அறிந்துள்ளனர் மக்கள்!கோர்ட்டுகளே நீதியைக் குளறுபடி செய்கின்றன!ஒரே வழக்கில்100 கோடி அபராதம் 4 ஆண்டு சிறை!அப்பீலிலோ அனைவரும் விடுதலை!கூட்டல் கணக்கை ஒழுங்காய்ப் போட்டால் குற்றம் ருசுவாகுமென்றுவிடாது வாதாடியதெல்லாம் வீணாகிப் போனதெப்படி?தீர்ப்புகள் எழுதப்பட கால நிர்ணயங்கள் வர வேண்டும்!வாதி,பிரதிவாதிகள் பரலோகம் போனபின்னால்...எதற்காகத் தீர்ப்பு!அரசவைகளில் தீர்ப்பு அன்றே எழுதப்பட்டன!அதனால்தான்மாதம் மும்மாரி பொழிந்து நாட்டைச் செழிப்பாக்கின!நீதியைத் தேடி நாமும் நிச்சயம் உண்ணாவிரதமிருப்போம்!நம்பிக்கைதானே என்றும் நல்லவர்களின் பேராயுதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT