கவிதைமணி

 நீதியைத் தேடி: பொன்.இராம்

கவிதைமணி

நீதியைத் தேடி
இந்திய மகள்
தேடித்தான்
பார்க்கின்றாள்!

சட்டங்கள் மதங்களுக்காக
திருத்திய பேனா
இன்று தமிழுக்காக
ஏன் மாற மறுக்கிறது!

தமிழா! நீ சற்று யோசிப்பாயா!
நாதியற்ற சேய்கள் கூட்டம்
உருவாக்கம்!
திரும்பும் இடமெல்லாம்
அரசியல் சாக்கடைகளின்
பணப்பெட்டி ஊர்வலம்!

டாஸ்மாக் கொண்டாட்டம்!
பொய்யான படாடோப
வாழ்க்கைக்கென
ஆறடி மண்ணே
சொந்தமில்லா நில்லா இவ்வுலகில்
அறுபது மகிழுந்துவுடன் பயணம்
செய்தால் எங்கே கிடைக்கும்
தமிழனுக்கு மரியாதை!
அந்நியமொழிக்கடலின்
அலை ஓங்கரிப்பில்
நீதி இலஞ்சக் கடலில்
மறைந்து பல வருடங்கள்
சென்றுவிட்டன!

சுயமரியாதை தமிழினம்
தமிழ்மொழியை உலக அரங்கில்
அடைக்கலமாக்கி பல வருடங்களாக்கிவிட்டன!

ஜல்லிக்கட்டில் மட்டும்
இளைஞர் படை
வெற்றி பெற
தமிழன் மானம் இல்லை!
சத்தியம்,தர்மம்,நேர்மை
மட்டுமே தமிழா
முழுமையான வெற்றி
கிடைத்திட வழி
செய்யும் என்பதை
ஏன் மறந்தாய் தமிழா!

தமிழுக்கு நீ செய்யும்
கடன் இதுதானே!
பொதுமறை சொல்வதை
தமிழினம் கேட்கும்நாள்
எந்நாளோ!

அந்நாளில் நீதி தேவதை
அருள்புரிவாள்!

எழுபது வருடங்களில்
தொலைந்து போன
மனிதநேயம்
இலஞ்சமின்மை தேடி
இந்தியமகள்
நீதியைத் தேடி

வருங்கால கலாம்,காந்திக்காக
காத்திருக்கிறாள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT