கவிதைமணி

சட்டம் : சங்கீதா

கவிதைமணி

வேண்டும்  எங்களின்  உரிமகள்  என்று
மீண்டும்  ஒன்றன  சேர்ந்தோம்  அன்று !
தமிழர்  எழுச்சியைப்  பார்க்கக்  கண்டு
மகிழார்  நாட்டினில்  யார்தான்  உண்டு ? 

ஜல்லிக்  கட்டுக்கொரு  சட்டமென
சொல்லிக்   கோஷமிட்டு  வந்தவனை
கண்டிட்டுப்  பயந்தது  ஆட்சி
கொண்டுவந்த  சட்டமே  சாட்சி !

இருக்குது  நாட்டினில்  பலதிட்டம்
அதற்கு  உள்ளது  பலசட்டம  !
ஓங்கிப்  போட்டார்கள்  கோஷம்
இறுதியில்  செய்வாரோ  மோசம் ?

காந்திவழிப்  போராட்டம்  போலே
சாந்திகாத்த  இளைஞர்கள்  மேலே
முடிவில்செய்த  தாக்குதல்  கண்டு
நொடியில்தெய்வம்  நீதி  தராதோ ?

காந்திவழிப்  போராட்டம்  போலே
சாந்திகாத்த  இளைஞர்கள்  மேலே
நீங்கள்செய்த  தாக்குதல்  கண்டு
கண்கலங்கார்  யார்தான்  உண்டு ?

சட்டம்   இயற்றிட  வேண்டுமென
திட்டம்  போட்டு   வந்தவனை
அடித்தே  நொறுக்கியக்  காட்சிகண்டு
வெடித்தது  எந்தன்  நெஞ்சமின்று !

கடலில்  கூட்டம்  போடக்கூடாது  என்று
மடல்தனைக்  காட்டியது  காவல்துறை இன்று !
நெடுநாள்  காந்திசெய்தப்  போராட்டமும்
அதனால்  பெற்ற  சுதந்திரமும்  தப்புதானோ ?

நிறையவே  சட்டங்கள்   நாட்டினில்  உண்டு !
பெரியதோர்  ஓட்டையை  அதனில்  கண்டு
ஆட்சியில்  உள்ளவர்  தப்பிக்கப்  பார்ப்பது
மாட்சியே  இல்லாச்  செயலென  ஆகுது !

சட்டத்தைக்  காத்திட  வேண்டுமென்  பவரே
சட்டையை  மாற்றல்போல்  மாற்றிட  லாமா ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

SCROLL FOR NEXT