கவிதைமணி

சட்டம்: ஆபிரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி

சிட்டம் கட்டி கிடக்கும் 
திட்டம் ஒவ்வொன்றும்
நட்டம் அடையலாயிற்று

கூட்டம் கூட்டமாகவே
கட்டம் கட்டி இளைஞரார்
பாட்டம் ஒன்றும் இன்றி

வட்டம் இட்டு அறவழியில்
நாட்டம் கொண்டு வெற்றி
பட்டம் பெற்ற வேளை

ஆட்டம் கண்டு அதிரடியாக 
மூட்டம் மூட்டி குளிர் காய
பதட்டம் கொள்ளலாயினரே

ஊட்டம் ஊட்ட உதவிக்கரம்
அக்கரை கொண்ட முதல்வர்
சட்டம் தவழ்ந்தது கைகளில்

வாட்டமுற்றுக் கிடக்கும்
தோட்டம் துறவுகளும் நீர்
ஓட்டம் முதற்கொண்டு

நோட்டமிட்டு கட்டிடும்
சிட்டம் தட்டும் தருணம்
சட்டம் ஆகும் வரையில் 

காட்டமற்று பொருப்போம்
ஒட்டடம் அடிக்க மீண்டும் 
இட்டம் எழும் போதிலே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தவா் கைது: இளைஞா் உயிரிழப்பு

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது

SCROLL FOR NEXT