கவிதைமணி

 சட்டம்:  ரீனா காவியா

கவிதைமணி

காலுக்கு செருப்பா? செருப்புக்கு காலா?
நூலுக்கு  ஊசியா?  ஊசிக்கு நூலா?
வேரின்றி மரமா ? மரம் காக்க வேரா ?
ஆளுக்கு  பெயரா? பெயருக்கு ஆளா ?

வீணுக்கு சட்டம் போட்டு
வேதனையை வளர்ப்பாரோ!!
கூனதனை நிமிர்த்தி விட
கூந்தலைத்தான் அறுப்பாரோ!!

ஊருக்கு  ஊர் போராட்டம் !!
பேருக்கு பேர் பேயாட்டம் !!
சேருக்குள் சிக்கியதைப் போல்
சித்தமெலாம் திகைப்பூட்டம்!!

பாருக்குள் விவசாயி தினம்
பதைபதைத்து சாகிறான்!!
பளபளப்பாய் விமானமேறி
பிரதமர் ஃபாரினுக்கு பறக்கிறார்!

நாளுக்கு நாள் வளரும்
நாசமதைத் தடுப்பீரோ..!
நல்ல முறை ஆட்சியதை
நலம்பெறவே தருவீரோ...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக, அமமுகவினா் மரியாதை

SCROLL FOR NEXT