முகப்பு
கவிதைமணி

ஓலைச் சுவடி முதல்….: பேராசிரியர் கிருஷ்ணன்

Updated On : 4 பிப்ரவரி, 2019 at 4:05 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:50 PM

புத்தகத்தின் உருவுக்கு
ஓலைச் சுவடியே முதல் என்றேன்.
ஒவ்வொரு முதலிலும் ஒரு முடிவுண்டென்றார்
ஓலைமுதல் பதிவுத் தொடக்கம் என்றேன்.
ஓலை எண்ண அலையின் முடிவு என்றார்.

எண்ணத்தின் பதிவு முடிவாகது என்றேன்.
பதிவின் விளைவு புது எண்ணமே என்றார்.
இரு எண்ணங்களும் வேறாகாது என்றேன்.
ஒரு குரலுக்கு பல உரை ஏன் என்றார்.

உணர்வின் கருவி திரிக்காது என்றேன்.
உணரக் கருவி தேவை இல்லை என்றார்.
மரம் கேட்க வேண்டாததால் காதில்லை என்றேன்.
கொடி படர கண் தேவைஇல்லை என்றார்,
கருவி வர கலை ஒடுங்குமா ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.