மரபிலே புதையுண்ட
வீரத்தை
நெஞ்சிலே உரமாய்
சேர்த்து வைப்பாள்
தாயாக ஆனபின்
சேய்க்கு உணவாக
பாலுடன் வீரத்தை
ஊட்டி வளர்ப்பாள்
நாட்டிற்கொரு கேடென்றால்
ஈன்றெடுத்த மகவை
போருக்கு அனுப்பி வைப்பாள்
நெஞ்சிலே வேல் பாய்ந்தால்
ஏற்றம் கண்டு மகிழ்வாள்
புறமுதுகிட்டாள்
காரி உமிழ்வால்
எதிர்த்து வரும் புலியைக்கூட
முறம் கொண்டு விரட்டுவாள்
முத்தமிழ் பால்குடித்த மூத்தவள்
சங்கத்தமிழாலே சந்ததியை வளர்த்தவள்
பயமென்பதை முளையிலேயே
கிள்ளி எரிபவள்
தமிழ்ப் பெண்ணல்லோ
வீர மங்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.