நீதியைத் தேடும்
முயற்சியில் சோர்ந்து
அநீதிக்கு
அடிபணிவது...
வெற்றிப் பயணத்தில்
வரும் இடர் கண்டு
தோல்வியின் பாதையில்
துணிவாய் நடப்பது...
மாநில முதல்வனாய்
வரவிரும்பியவன்
படிப்பை மறந்து
குறுக்கு வழி தேடுவது...
எரியும் நெருப்புக்கு
பயந்து ஓடியவன்
எண்ணெய் கொப்பரைக்குள்
குதிக்க முயல்வது...
இத்தனையும் தவறென்றால்
நிஜங்கள் இருக்க
நிழல் தேடி ஓடும்
நம் மனநிலையும் தவறே
நிஜமாய் உழைப்பவர்
நிழலாய் நடிப்பவர்
நிழலைத் தவிர்த்து நிஜம் தேடு
முன்னேறும் நம் நாடும் வீடும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.