கவிதைமணி

நிழல் தேடி: எஸ்.சுரேஷ்பாபு

கவிதைமணி

பசியாற 
நிழல் தேடினான்!
மரத்தை வெட்டியவன்!

அகலமானது சாலைகள்!
நிழல் தேடின
பறவைகள்!

இலையுதிர்த்த மரங்கள்!
கொளுத்தும் கோடை!
நிழல் தேடின பறவைகள்!

நிழலைத் தேடி
புறப்பட்டனர் பெற்றோர்
முதியோர் இல்லங்கள்!

நிழலைத் தேடி
பாலங்கள் அடியில் அமர்ந்தது
நாடோடிக் கூட்டம்!

கோடை வெயில்
தண்ணீர் பந்தலில் நிழல் தேடியது
தெரு நாய்!

வெட்டப்பட்ட மரங்கள்
வண்டியில் ஏற்றப்பட்டன
தொலைந்து போனது நிழல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT