கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: வே.புனிதா வேளாங்கண்ணி

கவிதைமணி

ஆறோடும் நீரோடும்
ஆடினோம்...பாடினோம்
அனைத்தும் நினைவுகளாகவே
சென்று விடுமோ என்ற ஏக்கம்..

ஆறையும் அடக்கி
அடிக்கல் நட்டு விட்டனர்
நீர் எங்கு செல்லும்...செல்ல
இடமின்றி
எங்கு சென்றதோ...

நமக்கான இடத்தில்
நாம் வசிக்கிறோம்..அப்படி
இருக்க‌
நீருக்கான இடம்
ஆறு...குளம்...ஏரிதானே
அது அதன் இடம் தேடி...ஆவியாகி
விட்டதோ...

ஆறோடும் நீரோடும்
நாம் ஆடிய ஆட்டங்கள்
ஏராளம்...ஏராளம்...அதை
பிள்ளைகளுடன் சொல்லதான்
முடிகிறது

ஆறா அப்படி என்றால்?
என்று பிள்ளைகள் கேட்கும்
கேள்வியாகி விட்டது..

ஆற்றில் அலசினோம்,கசக்கினோம்,
குடித்தோம்,குளித்தோம்...
சுத்தமாக..சுகாதாரமாகதான்
இருந்தோம்...
அனைத்தும் மீண்டும் நடக்க...
தூர்வாரி மீட்டெடுப்போம்...
நம் ஆறையும் நீரையும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT