கவிதைமணி

நீர் வற்றிய குளம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

கவிதைமணி
மாதம்மும்   மாரிபெய்து   குளங்கள்  ஏரி         மாக்கடல்போல்  நீர்நிறைந்து  மீன்கள்  துள்ளநாதத்தை  எழுப்புமலை   கரையைத்   தட்டி           நாரைக்கும்   கொக்குக்கும்   அழைப்ப   னுப்பவேதம்போல்   நாற்புறமும்   மரம்வ   ளர்ந்து            வேதவொலி   போல்புட்கள்   ஒலியெ   ழுப்ப  ஓதமுடன்   இயற்கையன்னை   எழிலைக்   கொட்டி            ஓங்காரம்   செய்ததெல்லாம்   எங்கே  எங்கே !அன்புடனே   மனிதநேயம்  செழித்த   நட்பில்            அரவணைத்த   கிராமத்து   மக்கள்   போலநன்னீராய்   ஊர்நடுவே   நிறைந்தி   ருந்து            நாளெல்லாம்   தாகத்தைத்  தீர்த்த   பொய்கைவன்மம்பொய்   களவுசூது   கயமை   என்றே            வளர்ந்துமனம்   தன்னலத்தால்   மனித  நேயம்அன்புநட்பு   வற்றிட்ட   நகர   மக்கள்            அவலம்போல்   ஆனதெல்லா   குளங்கள்   இன்று !மலைதகர்த்தார்   காடழித்தார்   முகில்த  டுத்து            மழைபெய்த   வழியழித்து  வறட்சி  செய்தார்அலைதவழ்ந்த   குளங்கனினை   மனைக   ளாக்கி            அருந்துநீர்க்குக்   கையேந்தி   இரக்க   லானார்உலைதன்னில்   விதைநெல்லை   இட்ட   போல            ஊர்காத்த   குளமழித்தே   உழவை  மாய்த்தார்தலைமுறைகள்  அழிந்திடாமல்   வாழ   வைக்கத்            தாத்தாக்கள்   போல்குளத்தைக் காப்போம்  வாரீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT