கவிதைமணி

நீர் வற்றிய குளம்: பொன் . குமார்

கவிதைமணி

ஊரின் நடுவே
ஒரு பெரும்பள்ளமாக 
காட்சியளிக்கிறது
நீர் வற்றிய குளம்.

பிள்ளைகள் விளையாட
ஒரு மைதானமாகி விட்டது
நீர் வற்றிய குளம்.

இரண்டு ஊர்களை
இணைக்கும் பாலமாகி விட்டது
நீர் வற்றிய குளம்.

மனிதர்களைப் போல
மழையை எதிர்பார்த்துள்ளது
நீர் வற்றிய குளம்.

பழைய நினைவுகளில்
பறவைகளை நினைத்து ஏங்குகிறது
நீர வற்றிய குளம்.

உயிர்களை வாழ வைத்து
உயிரற்று தோற்றமளிக்கிறது
நீர் வற்றிய குளம்.

அரசியல்வாதிகள் 
கண்ணில் பட்டு
காணாமல் போய்விடுமோவென
கலக்கத்தையே தருகிறது
நீர்வற்றிய குளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT