கவிதைமணி

நீர்வற்றிய குளம்: மீனா தேவராஜன்

கவிதைமணி

நீரென்னும் ஆடை களைந்தாய்த் தெப்பக்குளமே
காரென்னும் காதலன் கோபமாய்க் கைவிட்டனோ 
மாரியென்னும் பாரி இரக்கமாய்ப் பார்க்கல்லையோ
தூரும் துண்டுதுண்டாய்க்காய்ந்து வெடித்ததேனோ?

கொட்டியும் ஆம்பலும் படர்ந்து கிடக்கலையே
வெட்ட வெளியாய்ப் பொட்டலாய்க் கிடக்கிறாயே
மாதங்களானால் நீ காணாது மறைந்து விடுவாய்
காதர்கள் உன்மீது கட்டடங்கள் கட்டுவாரன்றோ

வற்றிய குளத்தில் வற்றின நீர்வாழ் உயிர்கள்
பற்றிய வேர் பற்றற விட்டன கொடிசெடிகள் 
சற்றும் கவலை கொள்ளற்க இயற்கை என்றும்
முற்றும் கைவிடுவதில்லைஇரக்கம் காட்டும்

காய்ந்தவன் காய்ந்தவன் அல்ல செங்கதிரும்
ஆய்ந்து ஆய்ந்து சேர்க்கும் மேகத்தொட்டியும்
வேய் குழல்களாய் விண்ணிலிருந்து கொட்டும்
தாயாய் உயிர் தரும் மாரி தரணியெங்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT