கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு:  ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

கவிதைமணி

வாழ்க்கை வளமாக 
வேண்டும் இரு சிறகு
கல்வியும் செல்வமும் அது
செல்வம் இல்லாமலும் வாழலாம் 
கல்வி என்ற 
ஒற்றைச் சிறகிருந்தால்...

வெற்றியை எட்ட
வேண்டும் இரு சிறகு
முயற்சியும் பயிற்சியும் அது
முயற்சி என்ற
ஒற்றைச் சிறகிருந்தால் 
பயிற்சி தானே வந்துவிடும்...

வாழ்க்கை அனுபவம் பெற
வேண்டும் இரு சிறகு
வெற்றியும் தோல்வியும் அது
தோல்வி என்ற சிறகால் கூட
தொடர்ந்து முயற்சித்தால்
அனுபவத்தால் வெற்றி கிட்டும்...

சிறகு எத்தனை இருந்தாலும்
வெற்றி தானாய் வராது
இருக்கும் சிறகை நாம்
சிறப்பாய் பயன்படுத்தினால் 
ஒற்றைச் சிறகோடு பறந்தாலும்
வெற்றியின் எல்லையை எளிதில் அடையலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT