சின்னஞ்சிறு கோடாய் பறந்து திரிந்த கூட்டம்தங்கள் சிறுகூட்டில் கொஞ்சிக் கிடந்த கூட்டம்துன்பம் வரும்போது சேர்ந்து எதிர்த்தக் கூட்டம்இன்றோ வாடும்படியாய் என்ன நடந்தது கூறீர்?உயரம் கண்டு பயம் கொண்டது இல்லைதுயரம் கண்டு துயர் கொண்டது இல்லைசிகரம் தொடவும் துணிந்து சென்றது உண்டுமரங்கள் ஏதுமின்றி எங்கள் வாழ்வு இல்லைசிறகு இருக்க வானம் தொட்டே விளையாடுவோம்ஓரிறகு விழுந்தாலும் கவலை விட்டே சதிராடுவோம்விறகுத் தேவைக்கு காய்ந்ததை எடுத்த காலம்போய்வியாபாரத் தேவைக்கு மரங்கள் வெட்ட அதிர்ச்சியானோம்நாட்டுக்குள் கடப்பாரை தீட்டியவரை கூட தவறுதான்காட்டுக்குள் இருப்போரை தீண்டினால் என்ன செய்வதுஎங்களது மறுசிறகான மரங்கள் குறையக் குறையஒற்றைச் சிறகு வெட்டப்பட்டதாகவே உணர்ந்து கொள்கிறோம்இந்த ஒற்றைச் சிறகு கொண்டு பறப்பதெப்படிமரமே இல்லா உலகமென்ற நினைவே தப்படிகரத்தில் அரிவாள் விட்டு விதைகள் தொட்டால்தரத்தில் உயர்வான் மனிதன் செவி சாய்ப்பானா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.