கூண்டுக்குள் சுதந்திரமாக
விண்ணிலே பறக்கமுடியாத
சிறகொடிக்கப்பட்ட
பறவைகள்...
இளமையிலேயே பொட்டும்,
பூவையுமிழந்து
விதவையாக்கப்பட்ட இளம்பெண்..
உன்னத காதலால்
நிகாரிக்கப்பட்ட காதலர்கள்..
வாழ்க்கை துணையிழந்து
துணிவோடு சமூகத்தில்
தனிமையில் போராடும் பெண்...
தனிமையோடு போராடி
வாழும் பிரம்மச்சாரிகள்...
முதுமையில் தனித்துவிடப்படும்
பெற்றோர்கள்...சமூகத்தில்
ஒற்றைச் சிறகோடு
காத்திருக்கிறார்கள்,
சுதந்திரத்திற்காகவும்,
வாழ்க்கை துணைக்காகவும்,
அன்புக்காகவும்,
உறவுக்காகவும்,
ஆதரவான வார்த்தைகளுக்காகவும்
துணை என்ற இன்னுமொரு
சிறகுக்காக!"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.