கவிதைமணி

ஒற்றைச்சிறகோடு:  எஸ். வேத ஜனனி

கவிதைமணி
மாலைநேரத்து சூரியன்வேலை முடித்து கிளம்புகையில்வேப்பமர நிழலில் படுத்துறங்கியவன்  முகத்தில்மேல்வந்து உதிர்ந்தது ஒற்றைச் சிறகு!இதமான வருடலில் விழித்தெழுந்தவன் கேட்டான்.ஒற்றைச்சிறகாய் உதிர்ந்துவிட்டாயே! வருத்தமில்லையா?பறவையின் உடலோடு ஒட்டியிருக்கையில் அதுபறக்க உதவினேன். வளர்சிதை மாற்றத்தில் உதிர்ந்தேன்!வருத்தம் எதற்கு மனிதா?உன்னுள்ளே ஒட்டியிருக்கும் சிலவற்றையும்ஒற்றைச் சிறகாய் நீயும் உதிர்த்துவிடு!உள்ளத்தே எழும் பேராசைகள்!பள்ளத்தே தள்ளும் பொறாமைகள்!உயர்வுக்கு தடைபோடும் சோம்பல்கள்!வெற்றிக்கு விடைகொடுக்கும் தயக்கம்தோல்விக்கு வழிகொடுக்கும் அச்சம்.இன்னும் எத்தனை எத்தனை கேடுகள்!அத்தனையும் ஒவ்வொன்றாய் உதிர்த்துவிடு!உதிர உதிர நீ உயர்ந்திடுவாய்!காற்றோடு பயணிக்கும் முன் கனிவோடுஉணர்த்திச்சென்றது ஒற்றைச்சிறகு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT