முகப்பு
கவிதைமணி

நிழலில் தேடிய நிஜம்: கா. மகேந்திரபிரபு

Updated On : 9 ஏப்ரல், 2018 at 3:32 PM
பகிர்:

அனல் காக்கும் சாலையில்
அலை அலையாய் மின்னும் 
அறிவை நெறி செய்யும் கனல் 
அள்ளத் தூண்டும் கானல் நீர் !

கானலை நம்பி கையில் உள்ள 
நிஜ நீரை கொட்டிய அவலம் 
கானல் என்று அறிந்த கணம் 
கதறி அழுதோம்  போச்சே !

நிழலில் தேடும் உண்மைகள் 
குருட்டுப் பொய்களின் தோரணம் 
நிஜத்தில் வெளுக்கும் வண்ணம் 
நிழல் நிஜத்தின் எச்சமிச்சம் !

Advertisement

நிழல் தேடி நிஜத்தை காண்போம்
நிழலில் வெயில் தேடும் அனலில் 
நன்கு இளைப்பாறுவோம் வாருங்கள் 
மரத்தின் நிழலே மரத்தின் நிஜம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.