நிழலில் தேடிய நிஜம்: கவிஞர் கே. அசோகன்
பொம்மையிடம் உறவாடி
செம்மையாக சிரித்தே
அம்மாவிடம் அழகாய் சொல்லுது!
பொம்மைக்கும் சோறு வேண்டுமென்றே!
சாந்துபொட்டின் சாயலில்
ஸ்டிக்கர் பொட்டுகள்
மின்னுகின்றது நெற்றியில்
மங்கையர்களின் அழகைக் கூட்டவே
மாக் கோலமிட்டார் மங்கையர்
ஸ்டிக்கர் கோலங்கள்
வீட்டு வாசல்களில்
மாவிலைத் தோரணங்கள்
மாதவன் புகழும் எம்.பி திரி வடிவில்
கோவிலில் …மோட்டார் வைத்த
மேளதாளங்கள் முழங்குகிறது
நிழலின் அடியில்
நிஜங்கள் ஒதுங்கி பல ஆண்டுகளாயின
பாலாறும் தேனாறும் ஓடும்
பவ்யமான வாக்குறுதிகள்
ஆலாய் பறந்தே தான்
நிழலில் என்றும் நிற்கின்றதே!
Advertisement