முகப்பு
கவிதைமணி

நீ கண் சிமிட்டினால்: ஷல்மா ஷாஜஹான்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:

உன் கால்கள் இரண்டும் 
அலைபாயுதே வானில்
சிறகு விரிக்க மறந்த பறவையாக..

வண்ணாத்திப்பூச்சி என்று
வானவில் வர்ணம் பூசி
கோலமிட்டுக் காத்திருக்கிறேன்...

காதல் என்ற சங்கமத்தில்
தோழி என்ற விண்ணப்பத்தில்
நிராகரிப்பு செய்த தூதாக...

பறந்து விரிந்த ஆலவிருட்சம் 
அகன்று விரிந்த அவனியில்
தொலைந்து போனேன்...

மண்புழு துடித்த வேதனை
கண் முன்னே நிழலாக
காதல் மறந்த சாதலாக
மோகம் கண்ட ஓவியமாக...

சொல் ஒன்று வார்த்தை ஆக
மொழி ஒன்று மோடை ஆக
நடை போடும் ஊர்கோலமாக
உருவம் கொண்ட நயமாக...

உன் ஒற்றைக்கண் பார்வை
என்னிதயத் துடிப்பின் தூறல் 
ஆயுள் உள்ள வரை 
நான் வாழ்ந்துகொள்ள.

முழு கட்டுரையைப் படிக்க →