முகப்பு
கவிதைமணி

நீ கண் சிமிட்டினால் : கலைபரமேஷ்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:

கையில் ஏந்தி கண் சிமிட்டாமல் 
காத்திருந்தேன் – நீ பிறந்த பொழுது
உன் கண் அசைவில் 
எனக்கு உயிர் கொடுத்தாயடி
முதல் முறை என் கண்ணீரை 
உன் மீது அருவியாக்கினேன்
இமைகளை அசைத்து சிரித்து நீ 
அழைத்த அம்மாவிற்காக
என் மாரோடு உன்னை அணைத்து
பால் கொடுக்கும்பொழுது
போதும் என்றாயே 
பட்டாம்பூச்சி கண் சிமிட்டலில்
பருவமடைந்து வந்த உதிரத்தின் வலியை 
என் கை இறுக்க பிடித்து 
விழி மூடி அழுத பொழுது 
உதிர்ந்து போனேனடி-நான்
சிறு வலியையே தாங்காத நீ 
யாரோ சிலரின் பசிக்கு இரையாகி
சத்தமின்றி கதறி அழுகிறாயடி இறந்த பின்பும் 
இப்பொழுது அசைப்பாயடி 
அந்த பட்டாம்பூச்சி கண்சிமிட்டலை
என் கனவிலாவது?
 

முழு கட்டுரையைப் படிக்க →