முகப்பு
கவிதைமணி

நீ கண் சிமிட்டினால்: கவிஞர் பி.மதியழகன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:

கலி விருத்தப்பா

உடைந்த கம்மாய்களும் உழவர் மறுவாழ்வும்
இடைஞ்சலாய் இருக்கும் இன்னல்கள் யாவும்
துடைத்தொழிப்பார் மக்கள் துயர் துடைப்பார்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

நாட்டிலே நடக்கும் நல்லது கெட்டதெல்லாம்
பாட்டினில் பாடும் பாவலர்கள் கருத்துக்களை
கேட்டேமுனைப்போடு காட்டுவார் பணியில்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

முத்தமிழ் அழித்திட முயலுவோர் மூக்கறுப்பார்
எத்திசையில்எதிரிகள்ஏவும் ஏவுகணைகளை
வித்தைகள் கற்றிட்ட வீரர்கள் வேரறுப்பார்கள்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

மதச்சண்டை மடமை மாறணும் மாண்புடனே
இதயம் உள்ளார் இரக்கமனம் வாழவேண்டும்
இதிகாசங்கள் சொன்ன இன்புடனே இருப்பார்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

முழு கட்டுரையைப் படிக்க →