முகப்பு
கவிதைமணி

நீ கண் சிமிட்டினால்: கவிஞர் ராம்க்ருஷ்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:
பார்வை ஓர் கள்ளோவியம் மயங்குகிறேன் நான்​கோர்வையாய் பார்த்தால் வேர்க்கிறேன் ஏன்ஆர்வம் காதல் கனியவேண்டுமே என்பதாலாபார்வை கண் சிமிட்டலாயின் படபடக்கிறது இதயம்கண் சிமிட்டல் என் இதயச் சுவர்களில் எதிரொலிக்கபெண் பாவை உந்தன் மீது கொண்ட காதலும்எண் எழுத்தின்றி இதயத்தில் கவிதை எழுதுகிறதேதண்ணென்ற குளிர்ச்சியில் இதயம் நடுங்குகிறதேவாரி அணைக்கிறதே உன் கண் சிமிட்டல் என்னைசீரிய காதலில் நெஞ்சங்களும் பின்னிப் பிணைகிறதேபோரிடும் பனிமழையால் இதயச் சுவர்கள் நனைகிறதேவேரிடம் தேடாமல் ஓரிடத்தில் உறைகிறதே காதல்ஓராயிரம் காதல் கதைகள் சொல்கிறதே சிமிட்டலும்தீராத காதல் ஏக்கங்கள் உடலெங்கும் பரவிப் படரநேரான பார்வைகளின் அன்பு மோதலில் தெறிக்கும்கூரான காதல் ஆயுதங்கள் நெஞ்செங்கும் குத்துகிறதேஉன் கண் சிமிட்டலில் உருகி நிற்கும் என் இதயச்சுவர்தன் நிலை மறந்து தவிக்கிறது தாலாட்டுப் பாடலாலேமுன்னேறும் ஆசையில் முத்த மழைகள் நான் தரவாமுடிவுரையாய் பதிலுரையும் திருப்பித் தந்துவிடு நீ.
முழு கட்டுரையைப் படிக்க →