நீ கண் சிமிட்டினால்: பான்ஸ்லே
வாங்கு வில் போன்ற வளைந்தபுருவங்களின் தாழ்வில் பால் மதி வதனத்தில்இரண்டு மத்ஸ்யங்கள் உன் நயனச் சொடுக்கில் அஞ்சன மெழுகு கரைந்திட அழகான பௌர்ணமி கன்னக்கதுப்புக்களில்அவசரமான கார்க்கோலங்கள் அங்கயற்கண்ணி விட்ட கணை அகிலத்தையே ஆட்டுவிக்க ஈதலும் துய்த்தலும் கூட மறந்ததே பாழும் கபி மனம் வெற்றுளத்தை பற்றுளமாக மாற்றிய பைங்கிளியே ஆரணங்கே அழகே அமைதியாக உன்னை ஆராதிக்கிறேனடி.