முகப்பு
கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்: கவிதா வாணி 

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:

கூச்சலுக்கிடையே நித்தம் 
நிகழும் வாழ்க்கை, 
நான் பெரியவன் நீ பெரியவன்- 
ஒன்றும் தெரியாதவன், 
எல்லாமும் தெரிந்தவனாய் - பாவிப்பவன்
சாதி, சமூக நீதி, அறிந்தவர் - 
அறியாதவர், வறியவர் - 
பெரியவர், நல்லவன் கெட்டவன்
என்று சாட்டையாய் 
சுழற்றி அடிக்கும் கூச்சல், 
கால வெளியெங்கும் கடந்து மிதக்க,
சந்தையில் ஒலிக்கும் 
இரைச்சலுக்கு இடையே - 
விசும்பும் தனிமையின் மெளன ஒலி,
வெற்றியின் வேட்கையிலும்
நேற்றைய கனவுகளிலும்
நிதர்சனமாய் நீர்த்துப் போக
சுயம் மறந்த காயம் நிறைந்த 
தனிமை காத்துக் கொண்டிருக்கிறது -
உண்மையாக உரையாட வரும்
உள்ளத்திற்காக,
அப்போது நிகழும் - 
ஓர் ஆன்மீக அதிசயம், 
பல அகலிகைகளை மீட்டெடுக்கும்
ஹிரண்ய கர்பத்திலிருந்து,
பொன் செய்யும் மருந்தென
மன்னவன் - தரிசனம் -
மெளனமாய் நிகழும் - என்ன?
நிகழ்வுக்கான நேர இடைவெளி -நொடியோ-
யுக மோ? நடத்துபவனே நன்கறிவான்'!!

முழு கட்டுரையைப் படிக்க →