தனிமையோடு பேசுங்கள்: சூ.மதன் குமார்
கவிஞனுக்கு தனிமை
கற்பனையின் ஊற்று...
துறவிக்கு தனிமை
தவத்தின் வலிமை...
ராணுவ வீரனுக்கு தனிமை
தீரத்தின் அடையாளம்...
காதலில் தனிமை
அன்பின் உச்சகட்டம்...
நிலவின் தனிமை
பெண்மைக்கு தன்னம்பிக்கை...
ஆராய்ச்சிக்கு தனிமை
உலகிற்கு புதிய கண்டுபிடிப்பு...
தோழனே!
தவிப்பதற்க்கு மட்டுமல்ல
உலகிற்கு நீ தனித்து தெரியவும்
தனிமை அவசியம்...
தனிமையோடு பேசு!