முகப்பு
கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்:   உஷாமுத்துராமன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:

தனிமை - அது
இனிமையானது
சிந்திக்கக் கிடைத்த "பொற்காலம்"
ஓசையின்றி  அமைதியுடன் 
தனிமையும் சேர்ந்தால்....
சிற்பி  ஒரு சிலை செய்துக்கி பேசுவான்!
கவிஞன்  ஒரு கவிதை எழுதி அதோடு பேசுவான்!
எழுத்தாளன்  ஒரு  கற்பனை 
கதாபாத்திரத்துடன்  பேசுவான் 
கிடைக்கும் எல்லோரும்  தனிமையினை 
எடை போட்டு  நேரத்தை திட்டமிட்டு 
விரும்பியவருடன்  பேசினால்  
தனிமையில் கிடைப்பது  இனிமையே!
இதில்.....
ஊக்கத்துடன் சாதிக்க 
ஏக்கமில்லா  மனதுடன் 
பக்கம் பக்கமாக உள்ளத்துடன்
உற்சாகமாக  பேசுங்கள்!
தனிமையில் பேசினால்  
மூடர்  என்பவர்களின் 
எண்ணத்தை மாற்ற 
திண்ணமான  மனதுடன்  
வண்ணக் கனவுகளை 
பற்றி பேசுங்கள்!
பேசியவர்  சாதிப்பர்....
ஏசியவர்  போதிப்பர்!
பேசுங்கள்!  பேசுங்கள்!
தனிமையோடு  பேசுங்கள்!

முழு கட்டுரையைப் படிக்க →