மழை இரவு
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM
தூது செல்லும்
மேகத் தோழிகளே ...
சூரியக் காதலன்
உங்கள் காதலை
ஏற்று கொள்ளாததனால் தானோ...
இரவில் மழையை
கண்ணீராய் உகுக்கின்றீர்களோ ...?
இரவின் மழையே ...
நீதான் அற்புதமான பொருள் ...
ஏனென்றால்,
ஒளியை கண்டு எல்லோரும்
மயங்குவது இயல்பு ....
ஆனால் நீ இருளை கண்டு
மயங்கினாயே.....!
வரையா மரபின் மாரி நீதானே...?
மழைக்காலனே...
நீ உன் தூதர்களான
இடி மின்னலுடன்
என்னை கைது செய்து கொண்டு போயேன்...!
- த.தினேஷ், கடலூர்.