கவிதைமணி

வாழ்க்கையெனும்  போர்க்களம்: கே.நடராஜன்

கவிதைமணி
குழந்தை ஒன்று வீட்டில் பிறக்கையில் ஒரே அமர்க்களம் அந்த வீட்டில் !குழந்தை தவழ்ந்து ஓடி விளையாடும் தருணம் விளையாட்டு தளம் ஒன்று உருவாகுது அதே வீட்டில் ! விளையாட்டு போல நாட்கள் கடந்து அந்த குழந்தைக்கும் ஒரு குழந்தை பிறக்கும் நேரம் மீண்டும் அதே அமர்க்களம் அந்த வீட்டில் ! அமர்க்களமாக  ஆரம்பிக்கும் ஒரு "குழந்தையின்" வாழ்க்கை என்றுமே ஒரு விளையாட்டுதான் ...விதி என்று ஒன்று  நடுவில் விளையாடாமல் இருந்தால் !விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று புரிந்தால் விதியின் விளையாட்டும் வாழ்வின் சிகரம் தொட கிடைத்த ஒரு ஒரு படி கல்லே   என்ற உண்மையும் தன்னால் புரியும் எந்த "குழந்தைக்கும்" !வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று புரிந்தால் போர்க்களம் ஆகாது  வாழ்க்கை என்றும் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT