கவிதைமணி

வாழ்க்கையெனும்  போர்க்களம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

கவிதைமணி
ஊழ்வினைதான்  எனயெண்ணி   அமைதி  யாக            உள்ளவாழ்க்கை  போதுமென்போர்   கோழை  யாவர்வாழ்க்கையெனும்  போர்க்களத்தில்   எதிர்த்து  நின்று            வருகின்ற   தடைகளினைத்   தகர்க்க  வேண்டும் !வீழ்த்துதற்கும்   முதுகினிலே   குத்து  தற்கும்            வினையாற்றும்  உட்பகையை   முறிய  டித்தேஏழ்மைக்குத்   துவளாமல்   எழுச்சி   யோடே            எழுந்துழைத்தால்   வறுமையிங்கே   ஓடிப்  போகும் !மூத்தோனாய்ப்  பிறந்திட்டால்   முதுகின்  மீது            மூட்டைகளாய்ச்   சுமைகளினைச்  சுமக்க  வேண்டும்காத்திருந்தே   இளையோரைக்   கரையை  ஏற்றிக்            காவலனாய்க்  குடும்பத்தைக்   காக்க  வேண்டும் !சூத்திரங்கள்   புதிர்கணக்கை   வடுவித்   தல்போல்            சூழ்ச்சிகளின்   முடியவிழ்த்துப்   பேண  வேண்டும்ஏத்திவிடும்  ஏணியாக   வாழ்க்கை   தன்னில்            எதிர்பாராத்   திருப்பங்கள்   கடக்க  வேண்டும் !பெற்றோர்கள்   உடன்பிறந்தோர்   மனைவி  யோடு            பெற்றெடுத்த   குழந்தைகளின்   தாக்கு  தல்கள்சுற்றத்தார்   சமூகத்தார்   ஆட்சி  யாளர்            சூழ்ந்திருப்போர்   கொடுக்கின்ற   நெருக்கு  தல்கள் !சுற்றுபுறம்   நதிகாற்றில்   மாசு  சேர்த்து            சுழன்றடிக்கும்  இயற்கையதன்   பேரி  டர்கள்முற்றாக   இவைகளிலே    மூழ்கி   டாமல்            முன்னேறல்  தாம்வாழ்வின்   வெற்றி  யாகும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT