கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்:  உஷா முத்துராமன்

கவிதைமணி
வாழ்க்கை என்பதே போர்க்களம் ஏனெனில்  -  அது நேற்று உதிர்ந்த இறந்தக்காலத்தையும்இன்று  பூக்கும் நிகழ்க்காலத்தையும் நாளை பூக்கவிருக்கும்  எதிக்காலத்தையும்காட்டும்  காலக்கண்ணாடி என்பதால்!வாழ்க்கை என்பதே  போர்க்களம்ஏனெனில்   -   அது  சமுதாயம்  தள்ளாடும்  பொழுது  அதை  எழுப்பி  நிறுத்த உதவும்  போர்வீரர்கள்  நிறைந்திருப்பதால்!வாழ்க்கை  என்பதே  போர்க்களம் ஏனெனில்  - அது  இயற்கை தோற்றத்தையும் செயற்கை மாற்றத்தையும்  உணரச் செய்யும்  பண்பு நிறைந்த விஞ்ஞானி என்பதால்!வாழ்க்கை  என்பதே  போர்க்களம் ஏனெனில்    - அது மனிதனின் வாழ்வில்  பல பெருக்கல்  வகுத்தல்களை போட உதவும்  கரும்பலகை என்பதால்!வாழ்க்கை  என்பதே  போர்க்களம் ஏனெனில்   -  அது மனிதன்  நடிக்கும்  நாடக மேடையாகி அவனை  உணரச் செய்வதால்!எனவே   -   வாழ்க்கையெனும்  போர்க்களத்தில் போராடி  ஜெயித்தால் காண்பது   சொர்கம்!  இல்லையெனில் காண்பது திரிசங்கு சொர்கம்!                                                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT