கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் இளவல் ஹரிஹரன் 

கவிதைமணி
போர்க்களமாய் வாழ்க்கையது வான பின்பு         புறமுதுகைக் காட்டாமல் எதிர்த்து நின்றுபார்க்கின்றோர் வியக்குவணம் வெற்றி யோன்றே         பரிசாகப் பெறுகின்ற முனைப்பைக் காட்டிநேர்க்கோட்டில் பயணிக்கும் நெஞ்சங் கொண்டு         நிலைமாறிப் போகாமல் வெல்ல வேண்டும்ஊர்ச்சபையின் நடுவினிலே நடந்தால் மாலை          உயர்தோளில் விழவேண்டும் பெருமை கொண்டே.வாழ்க்கையென்றும் சோலைகாணும் வசந்த மல்ல.          வழியெங்குந் தடைக்கற்கள் நிற்கும், மீறிச்சூழ்கின்ற தீவினைகள் நீங்கிச செல்ல          தொடர்நாட்கள் இடரின்றி வாழ லாமே.ஆழ்மனதில் எப்போதும் அணையாத் தீயாய்          அமைகின்ற தன்னம்பிக் கையைக்  கொண்டுவீழ்ந்திடாது வெற்றியினைக் காண லாமே          வெல்கின்ற மனப்பாங்கைப் பேண லாமே.பூக்களெலாம் முட்களோடு போராட் டங்கள்         பொழுதெல்லாம் கண்டுவிட்டு மலரு மன்றோ.ஊக்கமதைக் கொண்டாலே ஊழை வெல்லும்         உறுதியிங்கு கிடைக்குமென்ற மொழியி ருக்கத்தேக்கமின்றி வாழ்க்கையெனும் போர்க்க ளத்தைத்        தெம்புடனே எதிர்கொள்ளும் உணர்வு தோன்றும்நோக்கமதே நம்வாழ்வில் நிறைய வேண்டும்        நோகாமல் வெற்றிநமைச் சேரு மன்றோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT